பெற்ற மகள், பேத்தி என்றும் பாராமல் இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்து வந்த 65 வயது நபருக்கு ஆயுள் தண்டனையை வழங்கபட்டுள்ளது.
இந்திய மாநிலமான மகாராஷ்டிரத்தில் வசிக்கும் ஒரு பெண், 2017-ஆம் ஆண்டு காவல் நிலையத்துக்கு சென்று ஒரு அதிர்ச்சியூட்டும் புகாரை கொடுத்தார்.
தனது தந்தை, தன்னை 15 வயதாக இருக்கும் போதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனக்கு திருமணம் ஆன போதிலும் அவர் தொடர்ந்து சித்ரவதை செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.
இதனை யாரிடமாவது கூறினால் அவரது மகளை ஏதாவது செய்துவிடுவேன் என்றும் தந்தை மிரட்டியிருக்கிறார்.
இப்படியே சென்றுகொண்டிருக்க, ஒருநாள் அப்பெண்ணின் மைனர் வயது மகள் அவரிடம் வந்து, தாத்தா தன்னை துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு அதிர்ந்து போன அப்பெண் உடனடியாக இது குறித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தந்தையால் தனக்கு நடந்துவந்த கொடுமையை சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அப்பெண், தனது மக்களையும் விட்டு வைக்கவில்லை என்று கொந்தளித்த நிலையில் அவர் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து, பொலிஸார் அவரது தந்தையை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகளை பதிவுசெய்தனர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு போஸ்கோ நிதிமன்ற நீதிபதி ரேகா என். பந்தரே அனைத்து ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக தீர்பளித்தார்.
அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளுக்கு 50,000 ரூபாயும், பேத்திக்கு 25,000 ரூபாயும் இழப்பீடு தொகை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.