அமெரிக்காவில், மகளுக்கு உள்ளூர் கடையில் பொம்மை ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள் அவளது பெற்றோர்.அந்த பொம்மை ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தியது (second-hand), என்பதால் அதை கழுவி சுத்தம் செய்து மகளுக்கு கொடுக்க அந்த தாய் முடிவு செய்தார்.
அப்படி அந்த பொம்மையைக் கழுவும்போது, அந்த பொம்மைக்குள் இரண்டு கவர்கள் இருப்பதைக் கண்ட அவர் தனது கணவனை அழைத்துள்ளார்.
அந்த கவர்களில் 5,000 மாத்திரைகள் இருந்துள்ளன. அவை போதை மாத்திரைகள் என்பதை அறிந்துகொண்ட தம்பதி பதறிப்போய் உடனே பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார் அந்த மாத்திரைகளை கைப்பற்றியதுடன், அந்த பெற்றோரை மனதார பாராட்டினர்.
அந்த மாத்திரைகளை ஒருவேளை தெரியாமல் அந்த குழந்தை சாப்பிட்டிருந்தால், மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
இந்த செய்தி வெளியானதையடுத்து அரிசோனாவின் El Mirage என்ற பகுதியிலிருக்கும் மக்கள் திகிலடைந்துள்ளனர். என்றாலும், அந்த பெற்றோர் அந்த மாத்திரைகளைக் கண்டுபிடித்துவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
2016ஆம் ஆண்டில் மட்டும், 40,000 அமெரிக்கர்கள் அந்த போதை மாத்திரையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.