சட்டத்தை சரியாக அமல்படுத்தும் எந்தவொரு பொலிஸ் அதிகாரி சார்ப்பிலும் தான் துணை நிற்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இரவு தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.