நடிகரும் அரசியல்வாதியுமான ஜீவன் குமாரதுங்கவின் மகள் மல்ஷா குமாரதுங்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
போதைப்பொருளுடன் தாம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்தே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
தனது வாகனத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் பொரலஸ்கமுவையில் வைத்து தாம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமையை அவர் மறுத்திருந்தார்.
பொலிஸில் முறைப்பாடு
இந்தநிலையில் இந்த பொய்யான தகவலை முதலில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ததாக மல்ஷா குமாரதுங்க கூறியுள்ளார். செய்தியாளர்கள் மற்றும் அவர்கள் செய்யும் கடினமான பணிகள் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
எனினும் புண்படுத்தும் செய்தியை உருவாக்குவது இந்த உன்னதமான தொழிலின் நற்பெயரைக் கெடுக்கும். அத்துடன் ஊடக நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மல்ஷா குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.