அம்பாறை பிரதேசத்தில் காரில் போதைப்பொருள் கடத்திய 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என கூறப்படுகின்றது.
சந்தேக நபர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 20 கிராம் கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த இளைஞர்கள் பன்னிபிட்டிய பிரதேசத்தில் இருந்து அம்பாறை பிரதேசத்திற்கு குறித்த போதைப்பொருளை கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.