அம்பலாந்தோட்டை பொலிஸ் விசேட படையினர் நேற்றைய தினம் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான வீரசேகர கங்கணத்தைச் சேர்ந்த சூரஜ் லக்ஷன் என்ற நபர், வாகன இலக்கத் தகடு மற்றும் செல்லுபடியாகும் காப்பீட்டுச் சான்றிதழ்கள் இல்லாத கருப்பு நிற ‘ஹோண்டா இன்சைட்’ வகை காரில் இருந்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் குறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.