பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹூவில் ஆரம்பித்து எங்குச் சென்று முடியப்போகிறது என்று தெரியாது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த செயல் , அரசாங்க புள்ளிகளின் நலனுக்கு அவ்வளவு நல்லதல்ல என கூறிய விமல் வீரவங்ச, விரைவாக இறங்கி செல்வதே நல்லதாகும் என்றார்.
இல்லையெனில் ஹூ சத்தமிட்டு கிண்டலடிப்பது மட்டுமன்றி மக்களின் குண்டாந்தடி தாக்குதல்களுடன் செல்லவேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்தார்.