ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.
பொதுமன்னிப்பு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க சட்டத்தரணிகள் ஊடாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார் என சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத்தை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றங்களுக்கு 2 வாரங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் ஒரு மாதத்திற்குள் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என சட்டத்தரணி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.