டெல்லியில் பைக் மீது ஸ்கூட்டி உரசியதால் ஏற்பட்ட மோதலில் இருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன
உத்யோக் விஹார் மெட்ரோ நிலையம் அருகே இளைஞர்கள் இருவர் ஸ்கூட்டியில் சென்றபோது, அவ்வழியே 2 பேர் சென்ற பைக் மீது உரசியதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது
பைக்கில் வந்தவர்களில் ஒருவன் கத்தியை எடுத்து, ஸ்கூட்டியில் வந்த இருவரையும் சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் சரித்த பிறகு, கூட்டாளியுடன் பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளான்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஒரு சிறுவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்