பொதுப்போக்குவரத்துக்களில் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று சுகாதார பிரிவினர் அறிவித்தால், அதன்படி, போக்குவரத்துறையில், நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சே இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் மாத்திரமே போக்குவரத்து பேரூந்துக்களில் பயணிக்கமுடியும் என்று அந்த அமைச்சு கூறினால், அதனை போக்குவரத்து அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
இதுவரை சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
அவ்வாறு வெளியிடப்பட்ட பின்னர், அரச பேரூந்துகள், தனியார் பேரூந்துகள் மற்றும் தொடரூந்துக்களில் தடுப்பூசி அட்டைகள் சோதனையிடப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்