பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்லுமாறு பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.