அடுத்த வருடத்தில் முதல் எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரர்களிடம் போட்டி விலை மனு கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த பெறுகையை சிங்கப்பூர் M/s Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் (92 Unl) 1,341,000 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் பெற்றோல்; (95 Unl) 459,000 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் கூட்டுதாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரர்களிடம் போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.