எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய பெட்ரோல், டீசல் விலைகளை இன்று அதிகரிப்பதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை மண்ணெண்ணெய் விலையை பெருமளவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்புகளுக்கு அமைய பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 500 ரூபாவை நெருங்கவுள்ளதுடன், டீசல் லீட்டர் ஒன்றின் விலை 450 ரூபாவை தாண்டவுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.