பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) ஒரு பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) 50 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளை மீட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது இலங்கையர் உட்பட மூவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 45. கிலோ கிராம் கஞ்சாவும் அடங்கும்.
இந்த நடவடிக்கை ஒக்டோபர் 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாக NCB ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து கொழும்பு வழியாக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.