தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ´தேசிய தலைவர்´ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்த போது பாராளுமன்றத்தில் இன்று குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் காலத்தில் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவிக்கும் போதே இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.