வெளிநாடுகளில் உள்ள நமது தமிழ் கடைகளில் விற்பனை செய்யும் மீன்வகைகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.
இவ் மீன்வகைகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
நீர்கொழும்பு, காலி, மாத்தறை.. போன்ற கடற்பிரதேசங்களிலிருந்து பிடிக்கப்பட்டு, பலநாட்கள் கொழும்பில் பதப்படுத்தப்பட்டு
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கொழும்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கசிந்த இரசாயனபதார்த்தங்கள், மற்றும் தண்ணீரில் கலந்த பிளாஸ்டிக் துகள்கள் போன்றவற்றால் அந்தபகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மீனினங்கள் இறந்து கரையொதுங்குவதை காணக்கூடியதாகவுள்ளது.
ஆகவே இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்வகைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.