புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸ் நேற்று மாலை வாகன விபத்தொன்றில் உயிரிழந்திருந்தார்.
நேற்று மாலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸ் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது அவரது மரணம் தொடர்பில் அவருடைய சாரதி மற்றும் கெப் ரக வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நகர சபை தலைவர் சிலருடன் ரால்மடம குளத்தில் குளித்துவிட்டு வாகனத்தில் பின்னர் அமர்ந்து சென்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டடோ அல்லது வேறு முறையிலோ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்னர்.
மரணம் தொடர்பில் பொலிஸார் பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.