புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடல் தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிராம மக்கள் இன்று அவரை தேடியபோது குறித்த நபர் குளத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.