புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் மேலும் தெரிவித்துள்ளார்.