சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தொழில் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியே செல்லும்போது இது தாக்கம் செலுத்ததாது என புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகள், இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மூடப்பட வேண்டும்.
சிறப்பு அங்காடிகள், ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில் 25 சதவீமானோருடன் இயங்க முடியும்.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அனைத்து உடற்பிடிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள் மற்றும் நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது என புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகள் ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றின் கொள்ளளவில் 25 சதவீமானோருடன் இயங்க முடியும்.