சிங்கப்பூரில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மே 5 முதல் 11 வரை ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் புதிய அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளதாகவும், தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
