ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு நடந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தாக நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதன்படி , இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.