புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் பெறுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சரும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு, புத்தசாசனம் மற்றும் மக்களுக்கான ஐக்கியத்துக்காக தாம் எப்போதும் நிற்பதாகவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.