அநுராதபுர அடமஸ்தானாதிபதியாக ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுர அடமஸ்தானாதிபதியாக பதவி வகிக்கும் 11 வது தேரர் இவராவார்.
அநுராதபுர அடமஸ்தானாதிபதியாக இருந்த வணக்கத்திற்குரிய பல்லேகம சிறினிவாச தேரர் கடந்த 18 ஆம் திகதி காலமானதை அடுத்து அவர் இந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.