உண்மை நேர்மை ஒழுக்கம்
“கல்வியே எமது சிறார்களின் மூலதனம்”
05.03.2022
3வது
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலைநேரக் கல்வி நிலையம் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் அம்பாறை
இன்றைய நல் நாளில் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் என்னும் கிராமத்தில் இன்று மாலைநேரக் கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது பிரதம விருந்தினர்கள் திரு ரீ.கஜேந்திரன் பிரதேச செயலாளர்,திரு கே.சதிசேகரன் உதவிப் பிரதேச செயலாளர் திருக்கோவில் திரு எஸ்.பி ரவீந்திரன் சிறப்பு விருந்தினர்கள் திரு எஸ்.பி.சீலன்,திரு மனோகரன் கிராமசேவையாளர்கள்,கெளரவ விருந்தினர்கள் திரு என்.யோகராஜா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே.வசந்தகுமாரி சமுத்தி உத்தியோகத்தர் மற்றும் எமது செயற்பாட்டாளர்கள் திரு என் நவீன் செல்வி சகிர்தா மற்ரும் நலன் விரும்பிகள் மாணவர்கள்,ஊர்மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் அனைவருக்கும் நன்றி
சிறிவள்ளிபுரம் என்னும் பின்தங்கிய கிராமத்தில் கல்வி ஊக்கிவிப்பு மிகவும் பின் தங்கியநிலையில் உள்ளது என்பதினை கருத்தில் கொண்டு மாலை நேரக் கல்வி நிலையம் ஒன்றினை உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர்
திரு மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று 05.03.2022 அவர்களின் சொந்த நிதியில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது கட்டிடங்கள் சீர் செய்யப்பட்டு புதிய இருக்கைகள் மேசை மற்றும் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. அத்துடன் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அத்துடன் இன் நல் நாளில் பயன் தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.
மேலும் சிறிவள்ளிபுரம் கிராமத்தில் வாழும் மாணவர்களை ஊக்கிவித்து கல்வியே எமது சிறார்களின் மூலதனம் என்பதனை அவர்களுக்கு தெளிவு படுத்தி கற்பித்தலை ஊக்கிவிக்கும் வண்ணம் கிராமத்தில் வாழும் நலன் விரும்பிகளை இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிநின்றோம்
அத்துடன் இந்த ஏற்பாட்டினை ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் எமது உறுப்பினர்களுக்கும் ஊர் நலன் விரும்பிகளுக்கும் இந்த இடத்தினை தந்துதவிய அதிகாரிகளுக்கும் நன்றி. மேலும் உண்மை நேர்மை ஒழுக்கத்துடன் எம்மோடு
பயணிக்கும் பட்சத்தில் உங்களுடன் தொடர்ந்து நாம் பயணிப்போம் என்பதினை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany