சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மணிமேகலை. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
கடந்த 3 சீசன்களாக கலக்கி வந்த மணிமேகலை திடீரென குக் வித் கோமாளி சீசன் 4ல் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்க்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ அல்லது புகைப்படத்தை தன்னுடைய கணவருடன் இணைந்து வெளியிடுவார் மணிமேகலை.
அந்த வகையில் தற்போது இன்று என்னுடைய பிறந்தநாள் என கூறிவிட்டு, பிறந்தநாள் அன்று கார் முன் சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது நல்ல வருடமாக எனக்கு இது இருக்கும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிமேகலை வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.