இந்தக்காலத்தில் காதல் என்பது கத்தரிக்காய் போல மாறிவிட்டது. ஒன்று வேண்டாம் என்றால் இன்னொரு காதலை தேடிக்கொள்கின்றனர். அதன் பெயர் உண்மையான காதலா என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியே ஒருத்தரை காதலித்தாலும் உருப்படியாக இறுதிவரை காதலித்து கல்யாணம் செய்ததுண்டா? என்றால் அதற்கும் பதிலில்லை. ஏனென்று ஆராய்ச்சி செய்தால் சின்ன விஷயங்களுக்காக கோபித்துக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள்.
அப்படி பிரிந்து சென்ற காதலர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அதை பல பெண்கள் நேரடியாக கூற மாட்டார்கள். சில அறிகுறிகள் மூலம் நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். எப்போதும் போல கோவமாக கத்தாமல் நிதானமாக பேசினால் அந்த பெண் நமக்கு வாய்ப்பு தரும் எண்ணத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். பிரிந்து சில நாட்கள் சென்ற பின் மீண்டும் பேச வேண்டும் என்று உங்கள் காதலிக்கு எண்ணம் வந்தால் நண்பனிடம் பேசுவது போல பேச ஆரம்பிப்பார்கள். அதை பயன்படுத்தி பேச ஆரம்பித்து விடுங்கள். நம்பர் மாற்றி மெசேஜ் பண்ணிட்டேன் என்றுதான் கூறுவார்கள். அது நமக்கு கொடுக்கும் வாய்ப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பேசுவதற்கு எதுவும் இல்லையென்றாலும் வெட்டியாக அரட்டை அடிப்பதை போல் ஏதேனும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றினால் அவர்கள் மனதில் நாம் இருக்கிறோம் என்று தெளிவாக தெரிந்துவிடும். ஸ்டேட்டஸ் சிங்கள் என்று போட்டிருந்தால் உங்களுக்கு பிறகு வேறு எவரையும் அவர் காதலிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் இப்போது யாரையாவது விரும்புகிறீர்களா என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினால் அவர்கள் உங்களை வேறொருவருக்கு விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை என்று அர்த்தம். வரலாற்றில் எப்போதும் நடக்காமல் இப்போது தன்னை மன்னித்து விடும் படி கூறினால் உங்க ஆளு 100 சதவீதம் திரும்ப உங்களை காதலிக்க தொடங்கி விட்டதாக எடுத்து கொள்ளலாம்.