தனது இரு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் Essonne மாவட்டத்தின் Saint-Germain-lès-Arpajon நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 8 வயது மற்றும் 7 மாத மகள்கள் இருவரையும் கத்தியால் குத்து கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தோழி ஒருவர் காவல்துறையினருக்கு அழைத்து தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். நள்ளிரவு 1.05 மணி அளவில் மூவரது சடலங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை Essonne மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.