இச்சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் ஆகிய நிலையில் சம்பந்தப்பட்ட நபர் நம்மவர் தான் என உறுதிசெய்வதில் எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது நண்பர்களே..
கடந்த 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 36 வயதுடைய தாய் , 3 வயது குழந்தை சம்பவ இடத்தில் கொல்லப்பட , 39 வயது தகப்பன் மற்றும் 7 வயது பிள்ளை கடும் காயங்களுடன் மருத்துமணையில் அனுமதிக்கப்பட்டனர் .
இக் கொடூரத்திற்கு காரணமானவர் எம்மவர் என்பது குறிப்பிடத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமான விடயம்.
26 வயது மதிக்கதக்க நபர் ile de France ன் Roissy- en- Brie யில் (Seine – et- Marne பிராந்தியம் ) முகவரியைக் கொண்டிருந்தவரை Champigny- sur – Marne ( Val – de -Marne பிராந்தியம்)
A 86 நெடுஞ்சாலையில் காவலத் துறை நிறுத்த முறபட்ட சிற்றூர்தி நிறுத்தாத காரணத்தால் காவல்த் துறை துரத்தி வந்துள்ளனர்.
தனது பாதையை மாற்றிய
அந்த சிற்றூர்தி ஆனது தொடர்ந்து A 3 நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்க காவல்த் துறையும் தொடர நெடுஞ்சாலையை விட்டு Aulnay- Sous – Bois வில் (93 ம் பிராந்தியம் ) நகருக்குள் செலுத்தப்பட அங்கே முதலாவது சிவப்பு விளக்கில் நிறுத்தபட்டிருந்த சிற்றூர்தியில் வேகமாக மோதவே அந்த அழகிய சிறு குடும்பம் சிதறியது என்பது வேதனையான விடயம்.
காவல்த்துறையால் துரத்தபட்ட நம்மவர் காயங்கள் இன்றி கைது செய்யபட்டமையாகவும் நிறை போதையில் இருந்தமையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏற்கனவே காவலத் துறையால் தேடப்பட்வர் எனவும் தெரிவிக்கபடுகிறது.)
படத்தில் காணப்படும் சிற்றூர்தியே அக்குடும்பத்தினர் பயணித்தது.
காட்சி தீயணைப்பு படையினரின் பதிவாகும்..
கொல்லபட்ட உயிர்களின் ஆத்ம சாந்திக்கும் , அப்பாவும் பிள்ளையும் நலம் பெறவும் பிராத்திப்போம் …
பிரான்ஸில் எம்மவர் ஒருவரின் அபரீத செயலால் பறிபோன இரு உயிர்கள் …
Previous Articleசாலையோர பேனர் விழுந்ததில் டூ வீலரில் சென்ற பெண் பலி… லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!
Next Article வாயு கோளாறுகளை சரி செய்யும் பிண்ணாக்கு கீரை: