பிரான்ஸில் ஈழ தமிழர் ஒருஒவர் வீட்டுக்கு திடீரென வருகை தந்த ப்ரெஞ்ச் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் அங்கிருந்தவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இதனால் சுற்றுவட்டாரத்தில் சிறுது பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது உள்ள கொரானா சமூக விதிகளின்படி பிரான்ஸில் பிரவேசிக்கும் இலங்கையர்கள் கொரானா சோதனையை தொடர்ந்து பத்து நாட்கள் வரை தனிமைப்படுத்தல்களை மேற்கொள்வது கட்டாயமானதாகும்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த குறித்த நபருக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,மேற்படி பொலிஸார் மற்றும் சுகாதாரதுறையினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து அறியவே மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசாரும் சுகாதார பிரிவும் குடும்பத்திற்கு பின்னர் தெரியப்படுத்தினர்.
மேலும் குறித்த வீட்டை சுற்றியிருக்கும் மக்களும் சற்று பயத்தில் உறைந்துள்ளனர்.தற்போதுள்ள சூழ்நிலையில் திடீர் பரவல்கள் ஏற்பட்டால்,மீண்டும் மட்டுபடுத்தப்பட்ட தனிமைப்படுத்தல்கள்,பகுதிநேர ஊரடங்குகளை மக்கள் வெறுக்கின்றனர்.எனவே தமிழர்கள் உட்பட அனைவரும் விதிகளை கடைபிடித்து கொள்ளுங்கள்.