பிரான்சில் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பரவியிருந்தற்குரிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 24 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டு பிரான்சில் முதலாவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Bordeaux நகரில் வசித்த சீன பெண்மணி ஒருவருக்கே இந்த தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே பிரான்சில் பரவியிருந்ததாக Inserm ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி (2019) முதல் மார்ச் 16 ஆம் திகதி (2020) வரையான காலப்பகுதியில் 9.144 பேரிடம் எடுக்கப்பட்ட ‘மாதிரிகள்’ ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவர்களில் 353 பேருக்கு SARS-CoV-2 எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிந்ததற்காக அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது தொற்று நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மருத்துவ உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீவிரமாக இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக Inserm மேலும் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பரவியிருந்தற்குரிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன
Previous Articleநல்லாட்சி அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டது
Next Article சற்றுமுன் மேலும் 06 பேர் உயிரிழப்பு -இலங்கையில்