30 ஆண்டு காலம் பிரபாகரன் போர் செய்தும் அழிக்க முடியாத இலங்கையை, கோத்தபய ராஜபக்ஷே இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றில் தெரிவித்துளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான ஒரு விஷயத்தை கார்டூனில் பார்த்ததாகவும் அதுதான் தற்போது இலங்கயில் நடந்து வருகிறதாகவும் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
மேலும் இலங்கையில் சிங்கள மக்களுக்கு நிலங்கள் உள்ளதாக தெரிவித்த அவர் வடகிழக்கு மக்களுக்கு நிலங்கள் உள்ளபோதும், மலையக மக்களுக்கு மட்டும் சொந்த நிலம் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்திலேயே கோத்தபய ராஜபக்ஷே இலங்கையை அழித்துவிட்டார் என தமிழ் எம்.பியான வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளமை தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

