பிரபாகரன் மற்றும் மனைவி மதிவதனி மகள் துவாராகா உயிருடன் இருப்பதாக கூறுவது, புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய இந்திய அரசாங்கத்திற்கு உதவும்.
அப்பாவி அகதிகளை புலிகள் என்று கூறி கைது செய்து சிறப்பு முகாமில் அடைக்க இந்திய உளவுப்பிரிவினருக்கு உதவும்.
சிறப்புமுகாமை மூடாமல் தொடர்ந்து வைத்திருக்க தமிழக அரசாங்கத்திற்கு உதவும். எந்த தீர்வையும் வழங்காமல் ஏமாற்ற ஜனாதிபதி ரணிலுக்கு உதவும் மீண்டும் பதவிக்கு வர மஹிந்த ராஜபக்ஷ கும்பலுக்கு உதவும்.
சிங்கள பௌத்த பேரிவானதிகளுக்கு தங்களை நியாயப்படுத்த உதவும். வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றாமல் வைத்திருக்க சிங்கள அரசுக்கு உதவும்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப சிங்கள அரசுக்கு உதவும். புலத்தில் புலிகளின் பேரால் பணம் திரட்ட சிலருக்கு உதவும்.
எல்லாவற்றையும்விட, மக்களை காப்பாற்றாமல் குடும்பத்துடன் தப்பி சென்றுவிட்டார் என்ற பழி பிரபாகரன் மீது விழும். குறிப்பாக தன் கடைசி மகன் பாலச்சந்திரனைக்கூட இரக்கமின்றி விட்டுச் சென்றவர் என்ற பழி ஏற்படும் என பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் தோழர் பாலன் முகநூலில் குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.