கொழும்பில் காணாமல்போன பாடசாலை மாணவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு – பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலைகயில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரியவருகிறது.
நேற்றைய தினம் காலை முதல் குறித்த இந்த மாணவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கறுப்பு நிற ஆடை, அணி பை ஒன்றுடன் இந்த மாணவன் காலை 6.20 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அல்டன் டெவோன் கென்னி என்ற 16 வயது மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மாணவரை காணவில்லை என கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். மாணவனின் நடமாட்டம் தொடர்பில் சிசிடிவி காணொளிகள் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0773 779850 (தீபிகா – மாணவனின் தாய்) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.