பஹ்ரைன் இளவரசர் முகமது ஹமாத் முகமது அல் கலீஃபா அனுமதியில்லாமல் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசியை நேபாளத்திற்கு எடுத்து வந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.திங்கட்கிழமை பஹ்ரைன் இளவரசர் அல் கலீஃபா, அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியின் 2000 டோஸ்களுடன் நேபாளல் வந்திறங்கினார்.
2000 டோஸ்களை இளவரசரின் குழு Gorkha மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக பஹ்ரைன் தூதரகம் தெரிவித்தது.நேபாளத்தில் மருந்துகளை இறக்குமதி செய்ய முன்கூட்யே அனுமதி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பஹ்ரைன் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்தது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக நேபாளத்தின் மருந்து நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.பக்க விளைவு காரணமாக ஐரோப்பிய நாடுகள், அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை பயன்படுத்துவதை தற்காலிகமான நிறுத்தி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.