சிவபெருமானின் அம்சமாக காணப்படும் உருத்திராட்சத்தை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் , அணியும் முறை ,அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வழிப்பாட்டு முறைகள் என்பன பற்றி நோக்குவோம்.
உருத்திராக்கம் என்பதன் விளக்கம் உருத்திராக்கம் என்பது இந்த பூலோகத்தில் சிவ பெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக் கூடிய ஒரு மூலிகை மரமாகும்.சித்தர்களின் அனுக்கிரகமாக்க அவர்கள் தியானம் செய்யும் போது உருத்திராக்கம் அணிந்து தியானம் செய்வார்கள்.
சிவன் எங்கெல்லாம் தாண்டவம் ஆடினாரோ அங்கெல்லாம் உருத்திராக்க மரங்கள் தோற்றம் பெற்றன என்பது ஐதீகம்.
உருத்திராக்கத்திற்கு மொழி உள்ளது
உருத்திரங்களின் வடிவத்திற்கும், கோடுகளையும் வைத்து எழுதப்படுவது உருத்ர மொழி. ஒவ்வொரு நடன யோகமும் இந்த உருத்திராக்கத்தில் உண்டு.
தெய்வமணி, நாயகமணி, முண்மணி, கடவுண்மணி, சிவமணி, கண்டம், கண்மணி, கண்டி, கண்டிகை என்பன உருத்திராக்கத்தின் மறு பெயர்கள்.
உருத்திராக்கத்தில் கிட்டத்தட்ட 21 முகங்கள் வரை உள்ளன. ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் ருத்ராட்சத்தை அணியலாம். பெண்கள் பொதுவாக அவர்களின் மாதவிடாய் காலம் நிறைவடைந்த பின்னர் அணிவது நன்மை பயக்கும்.
அவ்வாறு அணியும் பெண்கள் உருத்ராக்கம், பவளம், முத்து, ஸ்படிகம் ஆகியவை சேர்த்து கோர்த்து அணிந்து கொள்வது நல்லது.
பெண்கள் 3,6,9 முக உருத்திராக்கங்கள் மட்டும் அணியலாம். ஆண்கள் வெறும் உருத்திராக்க மாலையை கூட அணியலாம். சிறு சிறு ருத்ராட்சங்கள் கோர்த்த மாலையை அணியலாம்.
27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்!உருத்திராக்க முக சக்திகள்உருத்ராக்கத்தில் ஒரு முகம் கொண்ட உருத்திராக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. பொதுவாக 1, 3, 5, 6, 7, 9, 12, 21 முகம் கொண்ட உருத்ராக்கத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
உருத்திராக்கம் அணிபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு பூஜை செய்து அணிவது நல்லது. அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பிரதோஷம் அல்லது திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது.
ஒரு தாம்பூலத் தட்டு எடுத்துக் கொண்டு. அதில் ஒரு வெற்றிலை வைத்து அதன் மீது உருத்திராக்கத்தை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு உருத்ராக்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
உருத்திராக்கம் அணியும் போது சொல்லக் கூடிய மந்திரம் ருத்ராட்சத்திற்கு அணிவதற்கு முன் பூஜை செய்து அதற்கு ஒரு பூ வைத்து “ஓம் ருத்ரதேவாய நமோ நமக ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தைச் செய்து அணிந்து கொள்ள மிக சிறப்பான சக்திகள் கிடக்கப்பெறுவீர்கள்.
கலிகாலமான புனித உருத்திராக்கத்தைக் கூட தற்போது மரக் கட்டை, பிளாஸ்டிகில் போலியான உருத்திராக்கங்கள் விற்கப்படுகின்றன. உண்மையான உருத்திராக்கம் உள்ளே ஓடு போடு போன்று இருக்கும்.
அதை உடைத்துப் பார்த்தால் தான் தெரியும். உண்மையான ருத்ராட்சம் கண்டறிய அதை தண்ணீரில் போட்டு மூழ்கினால் உண்மையானது இல்லையென்றால் போலியானது என சிலர் கூறுகின்றனர்.பொதுவாக உண்மையான உருத்ராக்கம் கையில் எடுக்கும் போதே அதன் அதிர்வு நமக்கு தெரிந்துவிடும்
பொய், பொறாமை, ஏமாற்றுதல், தீமையானதைச் செய்தல், எந்த ஒரு உயிரினத்திற்கும் துன்பம் விளைவித்தல் என்பன செய்யக் கூடாது. அப்படி உருத்திராக்கத்தை அணிந்து இவற்றை எல்லாம் செய்தால் ஒரு போதும் புண்ணியம் கிடைக்காது.
திருடுதல், பொய், ஏமாற்றுதல் இல்லாமல் உருத்ராக்கம் அணிந்து நன்மை செய்ய அனைத்து வகை நன்மைகளும் தேடி வரும். உருத்திராக்கம் அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அணியலாம்.
பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலங்களில் அணியாமல் இருப்பது நல்லது. இரவில் தூங்கும் போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது.
மாமிசம் சாப்பிடுபவர்கள் அன்று உருத்திராக்கத்தை கழற்றி வைத்து விட்டு மறு நாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி அணிந்து கொள்ளலாம்.
பொய் பேசுதல், ஏமாற்றுதல் கூடவே கூடாது. இப்படி செய்தால் உருத்திராக்கத்தின் புண்ணியம் கிடைக்காது.
ஒரு குருவிடம் சென்று உருத்திராக்கம் அணிந்து கொள்ளலாம்.அல்லது நாம் ‘சிவாய நமஹ:’ என்ற மந்திரத்தை உச்சரித்து உருத்திராக்கத்தை அணிந்து கொள்ளலாம்.
உருத்ராக்கத்தை சிவப்பு கயிறு, தங்கம், வெள்ளி செயினில் வைத்து அணிந்து கொள்ளலாம். ஆனால் கருப்பு நிற கயிற்றில் ருத்ராட்சம் வைத்து அணியக் கூடாது.
உருத்திராக்கம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த உருத்ராக்கத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகள் அழிவடையும்.