நாட்டின் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரபல செயற்பாட்டாளரான ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith premadasa) தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை முன்னிறுத்துவதற்கு கட்சி முன்னதாகவே தீர்மானித்திருந்தது.
இருப்பினும், நேற்று (14-05-2022) இரவு வரை ரோஹினி கவிரத்னவின் வேட்புமனுவை கட்சியின் சிரேஷ்டர்கள் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அஜித் ராஜக்ஷவை (Ajith Rajapaksa) நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.