வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5 வரிகளில் திருத்தம்
அதன்படி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஐந்து வரி கட்டமைப்புகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
உள்நாட்டு இறைவரிச் சட்டம், வற், தொலைத்தொடர்பு வரிச்சட்டம், பந்தயம் மற்றும் விளையாட்டு வரிச்சட்டம், நிதி முகாமைத்துவச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.