பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியைப் போலவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் படத்தையும் பெயரையும் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்டனர்.
எனவே, பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.