“நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசே தேவையானது. அனைத்துத் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசில் இணைந்து நாட்டை வளப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு நாட்டின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேதம் இருக்கக் கூடாது. அதேவேளை சிறுபான்மைக்கட்சியினர், பெரும்பான்மையினக் கட்சியினர் என்ற பேதமும் இருக்கக் கூடாது.
தமிழ் – முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். நாடு தற்போது நெருக்கடியான நிலைமையைச் சந்தித்துள்ளது. அதிலிருந்து மீண்டு எழவேண்டும்.
இந்தநிலையில், மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய கட்சிகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொள்ளாமல் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி தீர்க்கமான முடிவு எடுத்து சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டும்” என புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.