பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் வகையிலான இவ்வாறான செய்திகளை முழுமையாகவே நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்