நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரங்கள் மற்றும் பெற்றோலிய வளம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
அக்குழுவின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார கையொப்பமிட்ட அறிக்கையில், பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுடன் ஆலோசிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் கூட்டமொன்றைக் கூட்டி ஏற்கனவே அதற்கான அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும் அவற்றின் சாதகத்தன்மையை மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்