மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் யொஹானி.
குறித்த பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து அழைப்பு வர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும் அவர் பாடியுள்ளார்.
குறித்த பாடலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஹிந்தியில் ஔிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 15 இல் யொஹானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் சல்மான் கானுடன் இணைந்து யொஹானி மெனிகே மகே ஹித்தே பாடலை பாடும் டீசர் வௌியாகி உள்ளது.
குறித்த நிகழ்ச்சி ஹிந்தி கலர்ஸ் டீவியில் இன்றிரவு 9.30 க்கு ஔிப்பரப்பாக உள்ளது.