பரபரப்பாக நடந்துவந்த பிக் பாஸ் சீசன் 5 பைனல் நடந்து முடிந்தது. இறுதிப் போட்டியில் இந்த முறை ராஜூ வெற்றி பெற வாய்ப்பு அதிகமிருந்தது. பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை நாம் முன்பே சொன்னது போல ராஜூ வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்த சிறப்பாக விளையாடிய ராஜூ பல ரசிகர்களை தனக்கு ஏற்படுத்திக் கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பைனலுக்குள் நுழைந்த முதல் போட்டியாளரானார் ராஜூ.
பொது மக்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் இறுதிக்கட்டத்தில் ராஜூ வெற்றி பெற வேண்டுமெனவே விருப்பம் தெரிவித்தனர். அதன்படி தற்போது டைட்டில் வின்னராகியிருக்கிறார் ராஜூ. ராஜூவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. ராஜூவுக்கு பிக் பாஸ் கோப்பையை வழங்கினார் கமல்ஹாசன். ராஜூவின் அம்மா என் மகன் வென்றது சந்தோஷமா இருக்கு எனச் சொல்ல, எங்களுக்கு சந்தேதோஷமா இருக்கு என்றார் கமல். ராஜூவின் மனைவி, ” எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ராஜூவோட முகத்துல இந்த சந்தோஷத்தைப் பாக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் ராஜூவுக்கு ரொம்ப ஆதரவு குடுத்தீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நன்றியைத் தவிர என்ன சொல்றதுனு தெரியல” என்றார்.