பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு (56) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை ஆமிர் கானின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் “ஆமிர் கான் Covid-19க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளார். அவர் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றிக்கொண்டு, தனது வீட்டில் தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமீப நாட்களில் அவருடன் நெருங்கிய அல்லது நேரடி தொடர்பில் இருந்த அனைவரும் கோவிட்-19 பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமிர் கான் அடுத்ததாக கரீனா கபூருடன் ஜோடி சேர்ந்து ‘லால் சிங் சத்தா’ எனும் படத்தில் வரும் டிசம்பர் மாதம் திரையில் காணப்படவுள்ளார்.
முன்னதாக, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா, கனிகா கபூர், அஞ்சும் கபூர், வருண் தவான், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபல இந்தி நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.