வாழும்போது ஒருவன் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது இறுதி நிகழ்வில் கண்டுகொள்ளாலம் என பலர் கூறுவதுண்டு. அந்த கூற்றுக்கு சான்றாக பாலித தெவரப்பெருமவின் இறுதி நிகழ்வு அமைந்துள்ளது.
வாழும் காலத்தில் மக்களுக்காக பல சேவைகளை செய்த அரசியவாதிகளில் பாலித தெவரப்பெருமவும் ஒருவராவார். கொரோனா காலத்தில் மட்டும்ல்லாது, வடக்கில் வெள்லம் வந்தபோதும் தானே களத்தில் இறங்கி மக்களுக்காக சேவையாற்றியவர் தெவரப்பெரும. அவரது அகால மரணம் மூவின மக்களையும் துயரம் கொள்ளச்செய்துள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் அரச மரியாதையுடன் நடைபெற்றது. நேற்றுமுன்தினம்(18) இரவு மத்துகம யடதோலவத்தையில் உள்ள இல்லத்திற்கு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பூதவுடல் கொண்டுவரப்பட்டது.
அவரின் இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. இறுதி அஞ்சலி நிகழ்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட உயர்மட்ட அரசியல்வாதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் சடலத்துடன் அடக்கம் செய்யும் இடம் வரை மூவின மக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பாலித்த தெவரப்பெரும வாழும் காலத்தில் மக்களுக்காக வாழ்ந்த அரசியல்வாதியாக போற்றப்பட்டார். அவர் சமூக செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசிய கட்சியில் நீண்டகாலமாக அரசியல்வாதியாக இருந்த பாலித்தவுக்கு ஏனைய அரசியல்வாதிகள் போன்று பெருந்தொகை சொத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் விலைமதிப்பற்ற மக்களின் மனக்களை வென்ற அரசியல்வாதியாக அவர் இருந்துள்ளார்.
22 வருடங்களுக்கும் மேலான மக்கள் நட்புறவான அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பாலித தெவரப்பெரும, மக்கள் மனதில் உண்மையான அரச சேவையின் பெறுமதியின் பல மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளதாக இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கூறியுள்ளனர்.
அரசியல் தலைவரின் இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களால் இன்னும் தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.