மஹ ஓயாவின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணிநேரங்களில் பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கிரியுள்ள நீர் அளவீட்டு பகுதியில் இன்று (09) காலை 7 மணியளவில் 8.94 மீற்றர் அளவில் நீர்மட்டம் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அளவ்வ, திவுலுபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.