பிரபல சின்னத்திரை நடிகரான வெங்கடேஷ் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சின்னதிரை பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் வெங்கடேஷ்.
அதன் மூலம் மிகவும் பிரபலமான வெங்கடேஷ், தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சின்னத்திரையை தொடர்த்து, வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ள வெங்கடேஷ், இன்று திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இதை விஜய் தொலைக்காட்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.
இன்று நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம் திரைப்பிரபலங்களிடையோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமும் மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
View this post on Instagram