நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன என்றும் ஆனால் முழுமையான கூரை இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன. ஆனால் முழுமையான கூரை இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒரு தேசமாக நமது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து, நம் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். கல்வி மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தமும் நமக்குத் தேவை” என நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.