பாடகி யொஹானி திலோகா டி சில்வாவை பாராட்டும் விதமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கலாசார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.